ஓசூர் மாநகராட்சி 41-வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாகவும், பொதுமக்கள் நடமாட முடியாத அளவிலும் காட்சி அளிக்கினறன. மேலும் வாகன ஓட்டிகள் அவதிப்படும் வகையிலும் மிக மோசமான நிலையில் உள்ளன. இதனால் மக்களும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் இந்த சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-குபேரன், ஓசூர்.