தர்மபுரி பென்னாகரம் நகர பகுதிக்குள் பகல் நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கக் கூடாது என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான கனரக வாகனங்கள் பகல் நேரத்தில் சரக்குகளை ஏற்றி இறக்க நகர் பகுதிகளில் இயங்கி வருகிறது. மேலும் பிரதான சாலையில் கனரக வாகனங்களை நிறுத்தி பொருட்களை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபிநாத், பென்னாகரம்.