விபத்து அபாயம்

Update: 2023-07-09 17:09 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து துறையூர் சாலை செல்ல குறுக்கு பாதை உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி குப்பைகளுக்கு நெருப்பு வைப்பதால் சாலை புகை மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகளால் அவதியடைகின்றனர். மேலும் அவர்கள் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இதனை தடுக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகர், கொசவம்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்