ஓசூர் உழவர் சந்தைக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். அங்கு 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கால்நடைகள் கூட்டம், கூட்டமாக உழவர்சந்தைக்குள் புகுந்து காய்கறி, பழங்களை தின்றும், உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடமாடி வருகின்றன. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
- அஜித், ஓசூர்.