அந்தியூர் அருகே புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம், கோபி செல்லும் புறநகர் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் புதுமேட்டூருக்கு முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. கோபி, சத்தியமங்கலத்தில் இருந்து அதிகாலை முதல் இரவு 12 மணிவரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே அந்த வழியாக இயக்கப்படும் அனைத்து பஸ்களும் புதுமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வதற்கு அந்தியூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.