மன்னார்குடியிலிருந்து தஞ்சை செல்லும் அனைத்து தனியார் பஸ்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் நாள்தோறும் கூலிவேலைக்கு செல்பவர்கள், பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வழக்கமாக அரசு பஸ் கட்டணத்தை விட ரூ.5 கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மன்னார்குடி