போக்குவரத்து நெரிசல்

Update: 2023-07-02 16:48 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பஸ்கள் என 200-க்கும் மேற்பட்ட பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது புறநகர் பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பஸ்கள் அனைத்தும் நகர பஸ் நிலையத்தில் நின்று செல்கின்றன. பஸ் நிலையம் முன்பு சாலையோர நடைபாதை கடைகள், சாலையை ஆக்கிரமித்து நிற்கும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ், பாலக்கோடு.

மேலும் செய்திகள்