கோவிலுக்கு பஸ் வசதி

Update: 2023-06-28 16:42 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து மாட்டுவேலம்பட்டி பகுதியில் இருந்து அளவாய்மலை பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு விசேஷ தினங்களில் நூற்றுக்கணக்கானோர் படிகளில் நடந்து செல்கின்றனர். எனவே கோவிலுக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் முதியவர்கள், கர்ப்பிணிகள் சிரமம் இன்றி சென்றுவர சவுகரியமாக இருக்கும். இதுகுறித்து அறநிலையத்துறையினர் கவனத்தில் கொண்டு அளவாய்மலை பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம், அளவாய்ப்பட்டி.

மேலும் செய்திகள்