போக்குவரத்து நெரிசல்

Update: 2023-06-28 15:59 GMT

ஏரியூரில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் ஏராளமான கடைகள் உள்ளன. ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காகவும், மருத்துவம், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக பணிகளுக்காக ஏரியூருக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஏரியூர் கடைகளுக்கு பொருட்களை இறக்க வரும் கனரக வாகனங்கள், சாலையிலேயே நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்குகின்றனர். இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-இந்திரன், ஏரியூர்.

மேலும் செய்திகள்