பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-06-28 15:51 GMT

அந்தியூரில் இருந்து நகலூர், அத்தாணி, பங்களாப்புதூர், கணக்கம்பாளையம் வழியாக டி.என்.பாளையம் மற்றும் அத்தாணி, பாரியூர் வழியாக கோபி செல்வதற்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் காலை 7 மணி மற்றும் மாலை 4.10 மணிக்கு அத்தாணி வரை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற நேரங்களில் பஸ் இவ்வழியாக வருவதில்லை. இதனால் இந்த பஸ்சில் தினமும் பயணம் செய்து வந்த பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்கள், பயணிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அனைவரின் நலன்கருதி மீண்டும் அரசு டவுன் பஸ்சை அத்தாணி, டி.என்.பாளையம் வழியாக சத்தியமங்கலம் வரை அனைத்து நேரங்களிலும் இயக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்