நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு டவுன் பஸ், மினி டவுன் பஸ்களில் பள்ளி மாணவி, மாணவிகள் பள்ளிக்கு வரும் போதும், மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போதும் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இதுபோன்று ஆபத்தான முறையில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் பஸ் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், பள்ளிபாளையம்.