சென்னை மயிலாப்பூரில் இருந்து தியாகராயுநகர் செல்லும் மாநகர பஸ் (தடம் எண்: 5பி) கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த டிசம்பர் மாதம் 2 பஸ்களை மட்டும் இயக்கிவருகின்றது. தற்போது போக்குவரத்து பயன்பாடு அதிகமாகியுள்ளதால், மேலும் 2 பஸ்களை பயணாளிகளின் நலன் கருதி, கூடுதலாக இயக்க போக்குவரத்து துறை ஆவண செய்ய வேண்டும்.