பயணிகள் அவதி

Update: 2023-06-21 15:28 GMT

அந்தியூர் புதுமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள மரத்தின் கிளைகள் அருகே உள்ள பெயர் பலகையை மறைந்தபடி காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக இயக்கப்பட்டு வரும் பஸ்கள் பஸ் நிறுத்தம் இருப்பது தெரியாமல், பயணிகள் பஸ்சை நிறுத்தினாலும் நிற்காமல் செல்கின்றன. இதன் காரணமாக பயணிகள் பஸ்களின்றி மிகவும் அவதிப்படுகிறார்கள். மரக்கிளையை அகற்றவோ அல்லது பெயர் பலகையை இடமாற்றம் செய்யவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்