நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-06-18 17:18 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பள்ளி சாலையில் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்கின்றனர். மேலும் மாணவிகளை கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள். எனவே இப்பள்ளியின் முன்பு பெண் போலீசாரை பாதுகாப்பிற்காக நிறுத்த வேண்டும், மாணவிகளை கேலி, கிண்டல் செய்பவர்களையும், மோட்டார் சைக்கிள்களில் விதிமுறைகளை மீறி அதிவேகத்தில் அதிக ஒலி எழுப்பிக் கொண்டு செல்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜேஷ், பரமத்திவேலூர்.

மேலும் செய்திகள்