கிருஷ்ணகிரியில் சேலம் ரோடு, சப் ஜெயில் ரோடு ஆகிய சாலைகள் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்த சாலையில் உள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் இருசக்கரம், கனரக வாகனங்களை சாலையின் நடுவே ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஷாஜகான், கிருஷ்ணகிரி.