மீண்டும் பஸ்களை இயக்க கோரிக்கை

Update: 2023-06-14 17:21 GMT

பர்கூர் பஸ் நிலையத்திற்கு கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்தும் திருப்பத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்தும் சுமார் 30 நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக கொரோனா காலங்களில் திருப்பத்தூரில் இருந்து பர்கூருக்கு இயக்கப்பட்டு வந்த வழித்தட எண்கள் டி12 மற்றும் 31 ஆகிய நகர பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் இந்த பஸ்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சந்தோஷ், பர்கூர்.

மேலும் செய்திகள்