நாகை புதிய பஸ் நிலைய காம்பவுண்டு சுவர் அருகே பஸ்கள் உள்ளே நுழையும் இடத்தில் கால்வாயில் சிறிய சுவர் உள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் அந்தப் பகுதியில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அந்த சுவரை இடிக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை