தர்மபுரி மாவட்டம் ஏரியூருக்கு தினமும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த வாகனங்களை நிறுத்த போதுமான இட வசதி இல்லாததால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், ஏரியூர், தர்மபுரி.