பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-06-11 14:34 GMT

அத்தாணி-கோபி ரோட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள காலனி பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பஸ்நிறுத்தம் இல்லாததால் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் இங்கிருந்து அத்தாணிக்கு சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது. ஆற்று பாலத்தை கடந்து சவுண்டப்பூர் பாலம் பஸ் நிறுத்தம் செல்லும் போது அவ்வழியாக வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் முதியவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலனி பகுதியில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்