சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2023-05-31 16:48 GMT

கிருஷ்ணகிரியில் தினமும் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த சேலம் ரோடு, சப்-ஜெயில் ரோடு, கே தியேட்டர் ரோடு பெங்களூரு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. நடந்து செல்பவர்கள் மாடுகளுக்கு பயந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் காய்கறி சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கவும் மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ்வரன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்