கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையிலும், சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் பல இடங்களில் மணல்கள் சாலையில் உள்ளன. இந்த மணலில் சிக்க கூடிய இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் விபத்துக்குள்ளாகிறார்கள். குறிப்பாக சாலையோரத்தில் அதிகமாக மணல்கள் குவிந்து கிடப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்கள் செல்லும் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது.
குறிப்பாக சின்னாறு, சாமல்பள்ளம் பகுதிகளிலும், பேரண்டப்பள்ளி பகுதியிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் குவிந்துள்ளன. இந்த மணலை அப்புறப்படுத்தி, இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.