போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்

Update: 2023-05-17 14:47 GMT


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைத்தெருவில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி மாடுகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள்,வலங்கை மான்

மேலும் செய்திகள்

பஸ் வசதி