பேரிகேட் வைக்கலாமே!

Update: 2023-05-14 18:00 GMT

ராசிபுரம் டவுன் நாமக்கல் ரோட்டில் பிரசித்தி பெற்ற கோவில் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. இங்கு வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருவோர் அதிக வேகத்துடன் வருவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் அந்த சாலைகளின் மேற்கு புறத்தில் உள்ள தெருக்களுக்கும், பள்ளிக்கும் செல்வோர் சாலையை கடக்க முடிவதில்லை. எனவே விபத்துகளை தடுக்க பேரிகேட் வைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணியன், ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்