நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்

Update: 2022-04-25 15:18 GMT
சென்னை ஆதம்பாக்கம் முதல் மேடவாக்கம் செல்லும் மெயின் ரோடு சாலையில் உள்ளகரம் பகுதியில் ஆயில் மில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் பணி நிமித்தமாக அருகில் உள்ள பகுதிகளுக்கு தினமும் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாத காரணத்தினால்‌ மழை மற்றும் வெயில் காலங்களில் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ் நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

மேலும் செய்திகள்

பஸ் வசதி