இரவு நேரங்களில் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-05-10 17:36 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் பகல் நேரத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இரவு நேரங்களில் இயக்கப்படுவதில்லை. இதனால் இரவு 9 மணிக்கு மேல் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதிகளில் இருந்து மெணசி, மருக்காலம்பட்டி, ஆலாபுரம், மோளையானூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பஸ் நிலையங்களில் காத்து கிடக்கின்றனர். எனவே இரவு நேரங்களில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்த், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்