பயணிகள் நிழற்கூடம்

Update: 2023-05-07 17:37 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள நிழற்கூடம் சிறியதாக உள்ளது. மேலும் இருக்கைகளும் போதுமான எண்ணிக்கை இல்லை. தற்போது வெயில் காலம் என்பதால் பயணிகள் வெயிலில் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பயணிகள் நிழற்கூடத்தை கூடுதல் இருக்கைகள் அமைத்து விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

-பக்தவச்சலம், சேலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி