பஸ் இயக்க கோரிக்கை

Update: 2023-05-07 17:24 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து ஆலப்பட்டி வழியாக தொட்டிபள்ளம் வரை மதியம் 12.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் என பஸ் இருமுறை இயக்கப்பட்டது. தற்போது அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரகுநாதன், ஆலப்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி