மணல் லாரிகளால் விபத்து அபாயம்

Update: 2023-04-30 18:01 GMT

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம், புதன் சந்தை, களங்காணி வழியாக லாரிகளில் மணல் கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு மணல் ஏற்றி செல்லும் லாரிகள், மணலை தார்பாயால் மூடி செல்வதில்லை. இதனால் காற்றடிக்கும் போது சாலையில் செல்லும் 2 சக்கர வாகன ஓட்டிகள் மீது மணல் பறந்து வந்து விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாவதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதனை தடுக்க போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பு, நாமக்கல்.

மேலும் செய்திகள்