சேதமடைந்த சிக்னல் கம்பம்

Update: 2023-04-19 16:50 GMT

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் கம்பம் சேதமடைந்து பல நாட்களாக சாலை ஓரம் கிடக்கிறது. இதனால் இந்த பகுதியை அதிவேகமாக கடக்கின்ற வாகனங்கள் சிக்னல் இல்லாததால் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சிக்னல் கம்பத்தை சரி செய்ய நடவடிக்ைக எடுப்பார்களா?

-பாஸ்கர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்