கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் காரப்பட்டு பஸ் நிறுத்தத்தில் அங்குள்ள கடைகளுக்கு வரும் நபர்கள், வெளியூர் செல்லும் நபர்கள் இருசக்கர வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சாலையோரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேந்திரன், காரப்பட்டு, கிருஷ்ணகிரி.