தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையம் அருகில் டாக்டர் பாட்ஷா தெருவில் உள்ள தனியார் லாட்ஜ் எதிரே பொதுமக்கள 2 சக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் சாலை குறுகியதாக மாறி வருகிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்படுகின்றனர். எனவே இங்கு வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-சபீர், அரூர், தர்மபுரி.