மோகனூர் பகுதிகளில் வாழைத்தார் ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனத்தில் செல்லும் போது அதன்மேல் ஊழியர்கள், வாழை தோட்டத்திற்கு வேலைக்கு வரும் நபர்கள் ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இவ்வாறு ஊழியர்களை ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?
-அர்ஜூன், நாமக்கல்.