தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா பெரியப்பட்டியில் காந்தி நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் முதியோர்களும் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே அரூரில் இருந்து நரிப்பள்ளி, இருக்கலூர் வழியாக காந்தி நகருக்கு நகர பஸ்கள் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பாகிருஷ்ணன், அரூர், தர்மபுரி.