பஸ் நிலைய பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-04-09 17:26 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பஸ் நிலைய விரிவாக்க பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் பாதியிலேயே நின்று விட்டது. பஸ் நிலையத்திற்கு உள்ளே பஸ்கள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. எனவே பஸ் நிலைய விரிவாக்க பணிகளை உடனடியாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கண்ணபிரான், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்