தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி- ராயக்கோட்டை சாலையில் இ.பி. அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-ஜெயக்குமார், மாரண்டஅள்ளி, தர்மபுரி.