தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பெரும்பாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் பென்னாகரம் மேச்சேரி வழியே செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தாமல் மெயின் ரோட்டிலேயே நின்று செல்வதால் பஸ் நிலையம் பயன்பாடு இன்றி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்த இடத்தை வாகனம் நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
-மாதையன், ஏரியூர், தர்மபுரி.