திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா, நாகமங்கலம் பஞ்சாத்துக்குட்டபட்ட ஆலம்பட்டி ரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் தினமும் மதுரை, கொட்டாம், துரங்குறிச்சி, பொன்னமராவதி, விராலிமலை போன்ற ஊர்களுக்கு திருச்சி தீரன்மாநகர், வி.ஏ.டி. நகர் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள், அரசு அலுவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் சென்று வந்தனர். தற்போது ஆலம்பட்டி ரோட்டில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளதால், பஸ்கள் அனைத்தும் பாலத்தின் மேல் பகுதி வழிகயாக சென்று விடுகிறது. இதனால் கீழே ஆலம்பட்டி ரோடு பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அரை கிலோ மீட்டர் வரை நடந்து சென்று பஸ் ஏற வேண்டியது உள்ளது. இதனால் அனைவரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்கள் அனைத்தையும் பாலத்தின் கீழ் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.