தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பஸ் நிலையம் வழியே நகர பஸ்கள் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு செல்கிறது. ஆனால் சேலம், பெங்களூரு, ஈரோடு செல்லும் புறநகர் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் நல்லம்பள்ளி பஸ் நிலையம் வழியாக வந்து செல்வதில்லை. இதனால் புறநகர் பஸ்சுக்காக, பயணிகள், நல்லம்பள்ளியில், லளிகம் சந்திப்பு சாலை பகுதியில் உள்ள பைபாஸ் சாலையின் இருபுறமும், வெயில் மட்டும் மழையில் நின்று தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே பயணிகளின் நலன்கருதி, புறநகர் பஸ்கள், நல்லம்பள்ளி பஸ் நிலையம் வழியாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜேஷ், தர்மபுரி.