போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-02 14:32 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரிழந்தூரில் கம்பர் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக விளங்குகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட சாலை குறுகலாகவும், ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கியும் காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலையை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்