திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்க பாதை வசதி இல்லாததால் ரெயில் பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து சென்று வருகிறார்கள். பயணிகளின் வசதிக்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 3 இடங்களில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இந்த பணி முழுமை பெறாமல் மந்தமாக நடைபெற்று வருகிறது. பயணிகளின் பாதுகாப்பை கருதி ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.