கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதி விவசாய தோட்டங்களில் விளையும் காய்கறிகள், கீரை வகைகளை நாள்தோறும் சரக்கு வேன்களில் ஏற்றி மார்க்கெட்டுக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு காய்கறி, கீரை பாரங்களை ஏற்றி வரும் சரக்கு வேன்களை டிரைவர்கள் அதிவேகமாக ஓட்டி வருவதால் சூளகிரி, அத்திமுகம், பேரிகை, சாமல்பள்ளம் மற்றும் சுற்று பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே போலீசார் இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கொண்டப்பா, புன்னாகரம், சூளகிரி.