நாகை மாவட்டம் தோணித்துறையில் ரெயில் மேம்பால பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்லும் போதும் விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் தோணித்துறை