திருச்சி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலமான புளியஞ்சோலைக்கு திண்டுக்கல், தஞ்சாவூர், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். துறையூரிலிருந்து புளியஞ்சோலை செல்லும் சாலையில் நடக்கும் விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க, எச்சரிக்கை குறியீடுகள், சமிக்கைகளை வைத்து புதிதாக வருபவர்கள் விபத்தின்றி வீடு திரும்ப, சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.