கிருஷ்ணகிரி ரவுண்டானா, 5 ரோடு, சேலம் ரோடு, சப்-ஜெயில் ரோடு, பெங்களூரு சாலை, சென்னை சாலை ஆகிய சாலைகளில் அதிகளவில் வாகனங்கள் செல்கிறது. இந்த சாலைகளில் ஆடு, மாடுகள் அதிக அளவில் சுற்றி திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் ஒரு சில நேரங்களில் வாகன ஓட்டிகள் ஆடு, மாடுகளின் மீது மோதி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஷாஜகான் கிருஷ்ணகிரி.