கிருஷ்ணகிரியில் இருந்து வரட்டனப்பள்ளி செல்லும் சாலையில் சமத்துவபுரம், சுண்டம்பட்டி, மேல்ெகாட்டாய், சூரன்குட்டை. புலிகுட்டை, காத்தாடிகுப்பம் வழியாக எலத்தகிரி, கந்திகுப்பம் ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் போதிய பஸ்கள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த வழியாக பர்கூர் வரை நகர பஸ்கள் இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணி, பர்கூர், கிருஷ்ணகிரி.