அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் மாலை நேரங்களில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலையின் நடுப்பகுதியில் படுத்து கொள்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகள் மீது மோதி விபத்துகுள்ளாகி மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். சாலையில் கால்நடைகள் படுத்து கொள்வதை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.