ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு டிப்பர் லாரிகள் மூலம் கற்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுகின்றன. அவை அதிவேகத்தில் செல்வதோடு, அதிக பாரம் ஏற்றி செல்கின்றன. வேகத்தடையில் ஏறி இறங்கும்போது, டிப்பரில் இருந்து கற்கள் வெளியே சிதறி சாலையில் விழுகின்றன. இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த லாரிகளின் பின்னால் சாலையில் செல்லவே வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அதிக பாரம் ஏற்றி செல்லும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.