பயணிகள் அவதி

Update: 2023-02-19 17:07 GMT

கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தின் உள்ளே பயணிகள் உட்காருவதற்காக நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அந்த இடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் நிலையத்திறற்கு வரும் பயணிகள் உட்கார இடம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பயணிகளுக்கு இடையூறாக உள்ள இந்த இருசக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-செல்வம், கிருஷ்ணகிரி.


மேலும் செய்திகள்