கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் நடைபெறும் அரசியல் மற்றும் திருமணம் பொது நிகழ்ச்சிகளுக்கு பிளக்ஸ் பேனர் அமைக்க சரக்கு வாகனங்களில் இரும்பு கம்பிகளை ஏற்றி வருகின்றனர். அந்த கம்பிகள் சரக்கு வாகனங்களை விட பின்புறம் நீளமாக உள்ளன. இதனால் அந்த வாகனங்களுக்கு பின்னால் வரும் வாகனங்கள், அதுவும் இருசக்கர வாகனங்களில் வருவோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே பிளக்ஸ் பேனர் அமைக்க இரும்பு கம்பிகளை ஏற்றி வரும் வாகனங்களை கண்காணித்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, பர்கூர், கிருஷ்ணகிரி.