போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-08 14:47 GMT


திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நாகை செல்லும் சாலையில் ரவுண்டானா உள்ளது. இந்த ரவுண்டானாவில் அனைத்து பஸ்களும் பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பஸ்களுக்கு பின்னால் வரும் மற்ற வாகனங்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரவுண்டானாவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்